தூத்துக்குடியில் பயங்கரம் - நள்ளிரவில் மூக்கை மூடி அலறியடித்து வெளியேறிய மக்கள்
தூத்துக்குடியில் ஐஸ் ஆலையில் இருந்து வெளியேறிய அமோனியா
தூத்துக்குடி, கீழ அலங்கார தட்டில் ஜான் சேவியர் நகர் மீனவர் காலனியில் உள்ள ஐஸ் ஆலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறி பொதுமக்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்... முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி அமோனியா வாயு வெளியேறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது... சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அம்மோனியா வாயு, மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து தாளமுத்து நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்..
Next Story
