பிட்புல் நாய் தெரு நாயை கடிக்கும் கொடூர காட்சி - பொதுமக்கள் அச்சம்

x

பிட்புல் நாய் தெரு நாயை கடிக்கும் கொடூர காட்சி - பொதுமக்கள் அச்சம்

தெருநாயை அரசால் தடை செய்யப்பட்ட பிட்புல் வகை கடித்து குதறிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புன்னைநகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பிட்புல் வகை நாயை சாலையில் அழைத்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த தெருநாயை திடீரென பிட்புல் கடித்து குதறியது. எவ்வளவோ முயன்றும் தெரு நாயை மீட்க முடியாத கோர காட்சி வெளியாகி உள்ளது.

மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பிட்புல் நாயை அழைத்து கொண்டு வருவதால் அது குழந்தைகளையோ, சிறுவர்களையோ கடித்துவிடக்கூடும் என்ற அச்சம்

பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்