மேம்பாலத்தில் ஆட்டோ மீது கார் மோதி பயங்கர விபத்து – 9 பேர் படுகாயம்
மேம்பாலத்தில் ஆட்டோ மீது கார் மோதி பயங்கர விபத்து – 9 பேர் படுகாயம்
Summary
மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே காமராஜர் பல்கலைக்கழகம் முன்புள்ள மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில், குழந்தைகள் உட்பட 9 பேர் பலத்த காயமடைந்தனர்.
செல்லூர் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ஆட்டோவில் பயணம் செய்தனர். மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ மற்றும் காரில் இருந்த 9 பேர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
