ராமநாதபுரம் அருகே கோர விபத்து - 2 பேர் பலி, ஒருவர் கவலைக்கிடம்
ராமநாதபுரம் அருகே கோர விபத்து - 2 பேர் பலி, ஒருவர் கவலைக்கிடம்
ராமநாதபுரம் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தார். ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியைச் சேர்ந்த முகமது அர்ஷத், முகமது பகத், முகமது ஹசன் ஆகிய மூன்று இளைஞர்கள், இரவு இருசக்கர வாகனத்தில் தேவிபட்டினம் நோக்கிச் சென்றனர். புல்லங்குடி அருகே முன்னால் சென்ற அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் முகமது ஹசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முகமது அர்ஷத் மற்றும் முகமது பகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதுரைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட முகமது பகத், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
