தாம்பரத்தில் IT ஊழியரால் கோர விபத்து - அடித்து தூக்கப்பட்ட குடும்பம்
தாம்பரத்தில் அதிவேகமாக வந்த கார் மோதி 4 பேர் படுகாயம் - ஒருவர் கைது
சென்னை தாம்பரம் அருகே, சாலையை கடக்க முயன்ற 4 பேர் மீது அதிவேகமாக காரை மோதிவிட்டு தப்பிய மென்பொருள் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் சானடோரியம் பகுதியைச் சேர்ந்த அருள்தாஸ்-அமலா ஹாசல் தம்பதியரின் மகன் மற்றும் மகள் இருவரும், சேலையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி முடிந்து பேருந்தில் வந்த மகன் மற்றும் மகளுடன், அவரது தாயார் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோர் ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்றனர். அப்போது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். காரில் வந்த நபர் தப்பிய நிலையில், நால்வரையும் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சென்னை அயம்பாக்கம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்தனர். இந்நிலையில், விபத்து குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.