தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்து - தூக்கி வீசப்பட்ட உடல் பாகங்கள்

x

தொழிற்சாலையில் ரியாக்டர் வெடித்து விபத்து - 12 பேர் பலி

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பசமைலாரம் பகுதியில் செயல்பட்ட ரசாயன தொழிற்சாலையில் ரியாக்டர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 10க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தொழிலாளர்கள் சிலருடைய உடல் பாகங்கள் சுமார் 100 மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் தீக்காயங்களுடன் தொழிற்சாலையில் இருந்து ஓட்டம் பிடித்து உயிர் தப்பினர்.

தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்ட நிலையில், தொழிற்சாலையில் பணிபுரிந்த தங்களது குடும்ப உறுப்பினர்களின் நிலை என்ன? என்பதை தெரிந்து கொள்ள அங்கு உள்ளூர் மக்கள் ஏராளமானோர் குவிந்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்