முதியவர் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. அதிர்ச்சி CCTV

x

திருமுல்லைவாயில் பகுதியில் பிரபல உணவு கடை எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடைக்கு சொந்தமான கழிவு நீர் அகற்றும் வாகனம் இயங்கி வருகிறது.இந்த வாகனத்தை மணிகண்டன் என்பவர் ஒட்டி வந்துள்ளார்.இந்த நிலையில் இன்று வழக்கம் போல எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் இருந்து கழிவு நீரை அகற்றி விட்டு,அண்ணனூர் பகுதியில் உள்ள கழுவு நீரேற்று நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது திருக்குறள் சாலை அருகில் குறுக்கு சாலையில் எதிர் புறமாக வந்துள்ளார்.அப்பொழுது இடது புறமாக இருந்து முதியவர் ஒருவர் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தார்.இதனை கவனிக்காத கழிவு நீர் ஊர்தி ஓட்டுநர் மணிகண்டன்,இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார்.இதில் முதியோர் மீது லாரி ஏறி இறங்கி உள்ளது.இதில் பலத்த காயம் அடைந்த முதியவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு முதியவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே கவன குறைவாக வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் மணிகண்டனை திருமுல்லைவாயல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்