ஆணவக்கொலை - இளைஞர் கவின் குடும்பத்திற்கு திருமாவளவன் ஆறுதல்

பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை வழக்கில், போலீஸ் தம்பதியை கைது செய்யும் வரை இளைஞர் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். போலீஸ் எஸ்.ஐ.யாக உள்ள சரவணன் - கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகளுடன், கவின் என்பவர் பள்ளி பருவத்தில் இருந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பிடிக்காமல், எஸ்.ஐ சரவணனின் மகனும், இளம்பெண்ணின் சகோதரருமான சுர்ஜித், கவினை படுகொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இருப்பினும், கவின் படுகொலைக்கு போலீஸ் தம்பதியே காரணம் என்றும், அவர்களை கைது செய்யும் வரை, உடலை வாங்க மாட்டோம் என்றும், போலீசாருடனும் கவினின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com