கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யாவுக்கு மறுமணம்

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யாவிற்கு, கோவையில் மறுமணம் நடைபெற்றது.
கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யாவுக்கு மறுமணம்
Published on
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யாவிற்கு, கோவையில் மறுமணம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் - கெளசல்யா ஆகியோர், கடந்த 2015ஆம் ஆண்டு, சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம், உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில், சங்கர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, கெளசல்யாவின் தந்தை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கணவனை இழந்த கெளசல்யாவுக்கு, கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவருடன் மறுமணம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் அக்கட்சித் தலைவர் ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வன்னியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com