Hong Kong badminton | ஹாங்காங் பேட்மிண்டனில் மிரட்டிய இந்திய வீரர்கள் - காலிறுதிக்கு தகுதி

x

ஹாங்காங் பேட்மிண்டன் - இந்திய வீரர்கள் காலிறுதிக்கு தகுதி

ஹாங்காங் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீரர் லக்‌ஷயா சென் LAKSHYA SEN, சக வீரர் பிரணாய் உடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில், முதல் செட்டை 15க்கு 21 என்ற கணக்கில் இழந்த லக்‌ஷயா சென், 21க்கு 18, 21க்கு 19 என கடைசி இரண்டு செட்களை கைப்பற்றி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய நட்சத்திர ஜோடியான சாத்விக் - சிராக் ஜோடி, தாய்லாந்து ஜோடியை 18க்கு 21, 21க்கு 15, 21க்கு 11 என்ற கணக்கில் கைப்பற்றி காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

இவை எல்லாவற்றையும்விட, இந்திய இளம் வீரரான அயூஷ் செட்டி, உலகின் 9வது நிலை வீரரான கொடை நரோகாவை Kodai NARAOKA 21க்கு 19, 12க்கு 21, 21க்கு 14 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றதோடு, பேட்மிண்டன் உலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்