சிசிடிவி உதவியுடன் திருடனை மடக்கிப் பிடித்த வீட்டு உரிமையாளர்
கோவையில் வீட்டின் சுற்றுச்சுவரில் குதித்து திருட முயன்ற வடமாநில இளைஞரை, சிசிடிவி உதவியுடன் வீட்டு உரிமையாளர் துரத்திப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
சூலூர் கண்ணம்பாளையம், லட்சுமி நகரைச் சேர்ந்த மோகன் என்பவர், தனது புதிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நள்ளிரவில் வீட்டின் சுற்றுச்சுவரில் ஒருவர் குதிக்கும் சத்தம் கேட்டதும் சிசிடிவி காட்சிகளை மோகன் பார்த்துள்ளார். பின்னர் மோகன் வெளியே வந்ததும் அந்த நபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதைத்தொடர்ந்து அந்த நபரை மோகன் துரத்திப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
Next Story
