பள்ளிப் பாடத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வரலாறு..

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்கை வரலாறு ,அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்தில் சேர்க்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பள்ளிப் பாடத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வரலாறு..
Published on

* பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையை, பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக, ஆறாம் வகுப்பு புத்தகத்தில், அவரது வாழ்க்கை வரலாறு இடம் பெற்றிருந்ததாகவும்,

* ஆனால் அது தற்போது நீக்கப்பட்டுவிட்டதாகவும், அதுகுறித்து அரசு உரிய பதில் அளிக்கவில்லை என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சங்கிலி என்பவர், மனு தாக்கல் செய்திருந்தார்.

* இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரனைக்கு வந்தது.

* அப்போது, அடுத்த கல்வியாண்டு முதல் ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் முத்துராமலிங்க தேவரின் வரலாறு சேர்க்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com