"இதெல்லாம் வக்பு சொத்து ஆகாது" - உச்ச நீதிமன்றம் பரபர கருத்து
டெல்லி ஜாமா மசூதி உள்ளிட்ட இஸ்லாம் தொடர்புடைய பழங்கால நினைவுச் சின்னங்கள், வக்பு ஆகாது என்றும், பாதுகாக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்த ரிட் மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், முஸ்லிமாக பிறந்த நபர் மீண்டும் இஸ்லாத்தை 5 ஆண்டுகள் தொடர்ந்து பின்பற்றிய ஆதாரத்தை ஏன் காட்ட வேண்டும்? என கேள்வி எழுப்பினார். சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை அனைவருக்கும் பொதுவானது என்றும், சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை மதசார்பற்றது என்றும், வக்பு சட்ட திருத்தம் 20 கோடி மக்களின் உரி்மையை பறிப்பதாகவும் வாதிட்டார். இதையடுத்து பேசிய தலைமை நீதிபதி, டெல்லி ஜாமா மசூதி உள்ளிட்ட இஸ்லாம் தொடர்புடைய பழங்கால நினைவுச் சின்னங்கள், வக்பு ஆகாது என்றும் அவை அனைத்தும் பாதுகக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
