Hiphop Tamizha | ஹிப்ஹாப் தமிழா நிகழ்ச்சியால் சம்பவம்.. தலைகீழாக மாறிய வேளச்சேரி
Hiphop Tamizha | ஹிப்ஹாப் தமிழா நிகழ்ச்சியால் சம்பவம்.. தலைகீழாக மாறிய வேளச்சேரி
ஹிப்ஹாப் தமிழா நிகழ்ச்சியால் சம்பவம்.. தலைகீழாக மாறிய வேளச்சேரி
ஹிப்ஹாப் நிகழ்ச்சி - வேளச்சேரியில் கடும் போக்குவரத்து நெரிசல் சென்னை வேளச்சேரியில் பிரபல தனியார் மாலில் நடைபெற இருந்த ஹிப்ஹாப் தமிழா இசை நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் திரண்டதால், விஜயநகர் சந்திப்பு, குரு நானக் கல்லூரி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் குவிந்ததால், வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நெரிசலால் வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பெரிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கு முன்கூட்டியே போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்
