"இந்துக்கள் 4வது குழந்தை பெற்றால் ரூ.2 லட்சம்"

இந்துக்கள் 3வது குழந்தை பெற்றால் ஒரு லட்சமும் 4வது குழந்தை பெற்றால் 2 லட்சமும் வழங்கப்படும் என ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலி தெரிவித்துள்ளார்.

ஓசூரில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் பொதுக்குழு மற்றும் பதவி ஏற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அவர், ஸ்ரீராம் சேனா அமைப்பு அரசியல் செய்யாது ஆனால் தர்மத்திற்கு எதிரான நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்பும் எனதெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் ஜிகாதி மற்றும் மதம் மாற்றம் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், அதற்கு திமுக அரசு ஆதரவளித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com