மொகரம் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பள்ளிவாசல் முன்பு இந்துக்கள் தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். முதுவன்திடல் கிராமத்தின் நடுவே உள்ள பாத்திமா பள்ளிவாசல் முன்பு கூடிய இந்துக்கள், தீக்குழி இறங்கி நேர்க்கடன் செலுத்தினர். தீக்குழி இறங்கிய பக்தர்களுக்கு, இஸ்லாமிய பெரியவர் திருநீரு பூசி அருளாசி வழங்கினார். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.