விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராததால் தனியார் நிறுவன ஊழியர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்குதல்

திருப்பூரில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராததால் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராததால் தனியார் நிறுவன ஊழியர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்குதல்
Published on
திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் தனியாருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணியை சேர்ந்த சிலர் அந்த பின்னலாடை நிறுவனத்திற்கு நன்கொடை கேட்டு சென்றுள்ளனர். ஆனால் நிறுவனத்தின் உரிமையாளர் சுரேஷ் நன்கொடை தர மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று விநாயகர் ஊர்வலம் நடந்த போது இந்து முன்னணியை சேர்ந்த சிலர் பின்னலாடை நிறுவனத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அங்கிருந்த ஊழியர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com