இந்து தலைவர்களுக்கு அச்சுறுத்தல் : உளவுத்துறை தகவல் - 4 பேருக்கு வலைவீச்சு

இந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வந்த உளவுத்துறை தகவலையடுத்து, கன்னியாகுமரி பகுதியில் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்து தலைவர்களுக்கு அச்சுறுத்தல் : உளவுத்துறை தகவல் - 4 பேருக்கு வலைவீச்சு
Published on

வருகிற 25ஆம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ள நிலையில், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, இந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை 4 பேர் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த 4 பேரில் ஒருவரான செய்யது அலி என்பவரது வீட்டிற்கு சென்ற போலீசார், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி உள்ளனர். 4 பேரும் ஐஎஸ் அமைப்பில் தொடர்புடையவர்கள் எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com