விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அடிதடி- அடித்து கொண்ட இந்து முன்னணியினர்

x

உடுமலைப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியன்று வைத்து வழிபடப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மடத்துக்குளத்தில் உள்ள அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஊர்வலத்தில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் படுகாயம் அடைந்த இருவர் மீட்கப்பட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்