ஹிந்தி மொழி பயில்வோருக்கான ஆரம்பநிலை தேர்வு- தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 378 மையங்களில் நடைபெறும் ஹிந்தி மொழி பயில்வோருக்கான ஆரம்பநிலை தேர்வை ஒரு லட்சத்து 15 ஆயிரம் தேர்வு எழுதினர்.
ஹிந்தி மொழி பயில்வோருக்கான ஆரம்பநிலை தேர்வு- தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.
Published on

தமிழகத்தில் முழுவதும் ஹிந்தி மொழி படித்து வருபவர்களுக்கு ஆரம்பநிலை உயர்நிலை ஆகிய தேர்வுகள் வருடத்திற்கு இரண்டு முறை பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும். இந்தநிலையில் இந்த வருடத்திற்கான இரண்டாம் கண்ட ஆரம்பநிலை தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 378 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

சென்னையில் மட்டும் 120 க்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 55000 பேரும் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேரும் இந்த தேர்வினை எழுதினர்.இந்த தேர்வை எழுவதுதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது என்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.

X

Thanthi TV
www.thanthitv.com