பேருந்தில் இந்தி மொழியில் எழுதப்பட்ட அறிவிப்புகளை அகற்றி அதற்கு பதிலாக தமிழில் எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துதுறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்ததில், சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகளில் மட்டும் கவனக்குறைவால் இந்த தவறு நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.