மதுரை கே.கே.நகரை சேர்ந்த இம்மானுவேல் தாக்கல் செய்த பொது நல மனுவில், மதுரை உத்தங்குடியில் இருந்து கப்பலூர் வரையிலான மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டி ஆகிய 3 இடங்களில் டோல்கேட் செயல்படுவதையும், 27 கிலோ மீட்டருக்குள் 3 சுங்கச் சாவடி உள்ளதால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தேங்கி நின்று அவதிப்படுவதாகவும் கூறியிருந்தார். மதுரை எல்லைக்குள் மட்டும் 5 சுங்கச் சாவடிகள் உள்ளதை குறிப்பிட்ட அவர், 60 கிலோ மீட்டர் இடைவெளியில் சுங்கச் சாவடி அமைக்கும் விதி மீறும் அரசாணையை ரத்து செய்யவும் அவர் கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச் சாவடி அமைப்பீர்களா என கேள்வி எழுப்பினர். அடுத்தமாதம் 11ஆம் தேதி விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.