"மணமான பெண் இறந்தால் தாய் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது" - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

மணமான பெண் இறந்தால், அவரது தாய் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"மணமான பெண் இறந்தால் தாய் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது" - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
Published on

சென்னை அமைந்தகரையை சேர்ந்த கிருஷ்ணா என்பவருக்கு விஜயநாகலட்சுமி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் இருந்த நிலையில் 2013ம் ஆண்டு விஜயநாகலட்சுமி இறந்தவிட்டார். இந்நிலையில், வாரிசு சான்றிதழில், விஜயநாகலட்சுமியின் தாயார் சேகரியின் பெயர் சேர்க்கப்பட்டிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கணவர் கிருஷ்ணா, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து வாரிசுரிமை சட்டப்படி மணமான ஒரு ஆண் இறக்கும்போது மட்டுமே அவரது தாயாரை வாரிசாக ஏற்க முடியும் என்றும், ஒரு பெண் இறந்துவிட்டால் அவரது கணவரும், குழந்தையும் மட்டுமே சட்டபூர்வ வாரிசுகள் ஆக முடியும் என்றும் இறந்த பெண்ணின் தாய் தந்தையை சட்டப்பூர்வ வாரிசாக கருதமுடியாது என உத்தரவிட்டார். மேலும், விஜயநாகலட்சுமியின் வாரிசு சான்றிதழை ரத்து செய்ததுடன், அவரது கணவர் கிருஷ்ணா மற்றும் குழந்தை பெயர்கள் மட்டுமே கொண்ட புதிய வாரிசு சான்றிதழை பிப்ரவரி 15ம் தேதிக்குள் வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com