சித்த வைத்தியர் தணிகாச்சலம் கைதான விவகாரம்:"போலீஸ் காவல் 4 நாட்களாக குறைப்பு" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக தகவல் பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட சித்த வைத்தியர் தணிகாச்சலத்தின் 6 நாள் போலீஸ் காவலை, 4 நாட்களாகக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சித்த வைத்தியர் தணிகாச்சலம் கைதான விவகாரம்:"போலீஸ் காவல் 4 நாட்களாக குறைப்பு" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக தகவல் பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட சித்த வைத்தியர் தணிகாச்சலத்தின் 6 நாள் போலீஸ் காவலை, 4 நாட்களாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தணிகாச்சலத்தை ஆறு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் போலீசாருக்கு அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தணிகாச்சலம் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், போலீஸ் காவல் முடிந்து வருகின்ற மே 16-ஆம் தேதி ஆஜர்படுத்தும்போது, அவரது ஜாமீன் மனுவை விசாரித்து தகுதியின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென எழும்பூர் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com