காது கேட்காத குழந்தைக்கு உயர் சிகிச்சை

சத்தங்களை கேட்டு அழுத குழந்தை : பெற்றோர்கள், மருத்துவர்கள் மகிழ்ச்சி
காது கேட்காத குழந்தைக்கு உயர் சிகிச்சை
Published on

ஒசூரில், பிறவியிலேயே காது கேட்காத வாய் பேசாத குழந்தைக்கு உயர் தொழில்நுட்ப சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காது கேட்க வைத்துள்ளனர்.

ஓசூரில் பிறவியிலேயே காது கேட்காத வாய் பேசாத மூன்று வயது பெண் குழந்தைக்கு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இலவசமாக காக்லியர் இம்பிளேண்ட் என்ற உயர் தொழில்நுட்ப மருத்துவ அறுவை சிகிச்சை அளித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது குழந்தை முதன் முதலாக கூடியிருந்தவர்களின் சப்தங்களை கேட்டு அழுதது. குழந்தை காதுகேட்கும் திறனை பெற்றதால் குழந்தையின் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அந்த குழந்தைக்கு தொடர்ந்து பேச்சு பயிற்சி அளித்தால் மற்ற குழந்தைகள் போல சரளமாக பேசும் திறனை பெறும் என மருத்துவர்கள் தேரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com