உயிர் பலி வாங்கிய அதிவேக பயணம்
உயிர் பலி வாங்கிய அதிவேக பயணம்
அதிவேகமாக பைக் ஓட்டி சாலையோரமாக மாடுகள் மீது மோதி கேரள இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி வெளியானது. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் உயிரிழந்த சோகம். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாக்கப் வர்கீஸ் (23). அங்கு பிரபல மலையாள பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வந்தார். ஜாக்கப் வர்கீஸ் கல்லூரி அரியர் தேர்வு எழுதுவதற்காக சென்னை வந்தார். இன்று அதிகாலையில் கானாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் பைக்கில் தனது நண்பர் ஜஸ்வந்த்துடன் சாலையில் தவறான பாதையில் அதிவேகமாக சென்றார். அப்போது சாலையோரமாக படுத்து இருந்த மாடுகள் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் மாடு ஒன்றும் உயிரிழந்ததாக தெரிகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பைக்கில் வந்த இருவரும் தலைக்கவசம் அணியவில்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
