"மாஸ்டர்" படப்பிடிப்பு - சி.ஐ.எஸ்.எஃப் - தமிழக போலீசார் இணைந்து பலத்த பாதுகாப்பு

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பிற்காக மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினருடன் தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
"மாஸ்டர்" படப்பிடிப்பு - சி.ஐ.எஸ்.எஃப் - தமிழக போலீசார் இணைந்து பலத்த பாதுகாப்பு
Published on
நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் காட்சிகள் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2வது சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் இருந்து விஜய்யை வருமான வரித்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வருமான வரித்துறை விசாரணை முடிந்து நேற்று மீண்டும் படப்பிடிப்புக்கு விஜய் வந்த நிலையில் பாஜகவினர் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு விஜய் ரசிகர்கள் அங்கு கூடியதால் பதட்டம் ஏற்பட்டு, லேசான தடியடி வரை நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை வழக்கம் போல் நடிகர் விஜய் படப்பிடிப்புக்கு வந்தார். இந்நிலையில் படப்பிடிப்பில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினருடன் தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com