உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு
Published on

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, பவானி, சென்னிமலை ஆகிய மூன்று இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே விவசாய விளை நிலங்களில் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இழப்பீடு, மாதவாடகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாய சங்கத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதைபோல் சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com