விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க தடை கோரிய வழக்குகள் - உயர்நீதிமன்றம் தள்ளுபடி

விவசாய நிலங்களின் மீது உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க தடை கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க தடை கோரிய வழக்குகள் - உயர்நீதிமன்றம் தள்ளுபடி
Published on
சத்தீஸ்கர் மாநிலம், ராய்கரில் இருந்து கரூரில் உள்ள புகழூருக்கு 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொண்டு வரும், 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை மத்திய மின்தொகுப்பு கழகம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக சத்தீஸ்கரில் இருந்து தமிழகத்துக்கு ஆயிரத்து 843 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 5 ஆயிரத்து 530 உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விவசாய நிலங்களின் மீது மின்கோபுரம் அமைக்க தடை கோரி 11 விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், தமிழக மக்கள் தடையில்லா மின்சாரம் பெற ஏதுவாக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் பெரும்பான்மையான பணிகள் முடிந்து விட்டதாக குறிப்பிட்டார். உண்மையிலேயே மின்காந்த அலைகளால் பாதிப்பு இருந்தால், மாவட்ட ஆட்சியர்களிடம் கோபுரத்தின் உயரத்தை உயர்த்துமாறு கோரிக்கை மனு அளிக்கலாம் எனவும் நீதிபதி குறிப்பிட்டார். தமிழகத்தில் வெறும் 345 கிலோ மீட்டருக்கு மட்டுமே மின் கோபுரங்கள் அமைக்கும் நிலையில், மக்களிடம் தவறான தகவல்களை பரப்பி, வழக்குகளாக தாக்கல் செய்து மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துவதாகவும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com