

காஞ்சிபரம் , ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, இரண்டு சிலைகள் செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, தமிழக அரசு அறநிலைய துறை கூடுதல் ஆணையர் கவிதாவை பணியிடை நீக்கம் செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கவிதா, தாக்கல் செய்த மனுவில் தனக்கும் குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை எனவும், 90 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத காரணத்தால் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன், அதிகாரி பொன் மாணிக்கவேல், கவிதாவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.