பல முக்கிய பொறுப்பு வகித்த ஐகோர்ட் நீதிபதி `தீடீர் மரணம்’
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத் காலமானார். 1969ம் ஆண்டு பிறந்த அவர் வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை பூர்வீகமாக கொண்டவர்..1997ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை துவங்கிய நீதிபதி சத்தியநாராயண பிரசாத், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், இந்திய உணவு கழகத்தின் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் 42 வது நீதிபதியாக இருந்த இவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இதனிடையே நீதிபதியின் மறைவையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் 7ம் தேதி வழக்கு விசாரணை நடைபெறாது என்றும், 8ம் தேதி பட்டியலிடப்படும் வழக்குகள் 9ம்தேதி விசாரிக்கப்படும் எனவும் உயர் நீதிமன்ற பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.
Next Story
