அரக்கோணம் இரட்டை கொலை சம்பவம் - விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தலித் இளைஞர்கள் இரட்டை கொலையை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் இரட்டை கொலை சம்பவம் - விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

அரக்கோணம் இரட்டை கொலை சம்பவம் - விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தலித் இளைஞர்கள் இரட்டை கொலையை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரக்கோணம் பேருந்துநிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் சம்பவத்தை கண்டித்து அவர்கள் முழுக்கம் எழுப்பினர். உயிரிழந்த இளைஞர்கள் குடும்பத்தாருக்கு ஒரு கோடி நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்

கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

அரக்கோணத்தில் தேர்தலை ஒட்டி நடந்த மோதல் 2 பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சுதேசி பஞ்சாலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரவிக்குமார் எம்.பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார். படுகொலை செய்த நபர்கள் மீது தமிழக காவல்துறை பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்

X

Thanthi TV
www.thanthitv.com