

அரியலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஹெல்மெட் அணிந்த வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.