

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய போக்குவரத்து போலீசார் சார்பில், மோட்டார் சைக்கிளை ஒட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும், கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்காக பறை அடித்து இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் 75க்கும் மேற்பட்டவர்கள் மோட்டார் சைக்கிள்களில், ஒட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து இருந்தவர்களும் ஹெல்மெட் அணிந்து பேரணியாக சென்றனர். இந்த பேரணியை மீனம்பாக்கம் விமான நிலைய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.