ஒரு நாள் பெய்த மழைக்கே இலங்கை அகதிகள் முகாம் முழுவதும் மழைநீர்...

பழனியை அடுத்த புளியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் ஒரு நாள் பெய்த மழைக்கே முகாம் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது.
ஒரு நாள் பெய்த மழைக்கே இலங்கை அகதிகள் முகாம் முழுவதும் மழைநீர்...
Published on

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த புளியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் ஒரு நாள் பெய்த மழைக்கே முகாம் முழுவதும் மழைநீர் தேங்கி நோய் பரவும் நிலை உள்ளது. இந்த முகாமில் இலங்கையைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்டோர் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இங்கு அகதிகள் ரேசன் கடை, குடிநீர், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரு நாள் சுமார் 5 மணி நேரம் பெய்த தொடர் மழையால் முகாம் முழுவதும் மழை நீர் நிரம்பி குடிசைகளுக்கு சென்றது. மழை நின்ற பிறகும் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. எனவே நீரை அகற்றி, உரிய வசதிகளை செய்து தரவேண்டும் என்று அகதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com