நீலகிரியில் அடித்து ஊற்றும் அதிகனமழை - சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
Nilgiris | TN Rain | நீலகிரியில் அடித்து ஊற்றும் அதிகனமழை - சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு
நீலகிரியில், அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். உதகை-கூடலூர் சாலையில் மரம் விழுந்து உயிரிழந்த கேரளாவை சேர்ந்த 15 வயது சிறுவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேட்டி அளித்த அவர், மழையின் தீவிரத்தை உணர்ந்து மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என கூறினார். மேலும், கேரளா, கர்நாடக மாநில எல்லையோர மாவட்ட ஆட்சியர்களிடமும் மழை குறித்த எச்சரிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Next Story
