சென்னையில் இரவு முழுவதும் பரவலாக மழை - 58 மி.மீ மழை பதிவானதாக தகவல்

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது.
சென்னையில் இரவு முழுவதும் பரவலாக மழை - 58 மி.மீ மழை பதிவானதாக தகவல்
Published on

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது. குறிப்பாக எழும்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, அடையார், திருவான்மியூர், கிண்டி, மீனம்பாக்கம் போன்ற இடங்களில் காலையிலும் லேசான மழை தொடருகிறது. இரவு மட்டும் 58 மில்லி மீட்டர் வரை மழை பதிவானதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com