மக்களே உஷார்!... 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை

x

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் தஞ்சாவூரில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை தென்காசி, நெல்லை, குமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்