TN Rain | Rainfall | Weather | இன்று கனமழை இருக்கு.. இந்த மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்
தமிழகத்தில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சனிக்கிழமை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
