#BREAKING || தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.. மீட்பு பணியில் இறங்கும் வீரர்கள்

#BREAKING || தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.. மீட்பு பணியில் இறங்கும் வீரர்கள்
Published on

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வரும் கனமழை. மீட்பு பணியில் மேலும் 75 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இணைகின்றனர். மீட்புப் பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து ஏற்கனவே 125 வீரர்கள் கொண்ட 5 குழுக்கள் மழை பாதிப்புள்ள மாவட்டங்களுக்கு விரைந்தனர். மாநில அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் மேலும் 75 வீரர்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர். ஒரு குழுவுக்கு 25 வீரர்கள் வீதம் 8 குழுக்களில் 200 தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com