6 மணிநேரமாக கொட்டிய கனமழை - இருளில் மூழ்கிய கிராமங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் ஆறு மணி நேரத்திற்கு மேல் பெய்த மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இறையூர், திருநாவலூர், கெடிலம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் நள்ளிரவில் இருந்து விடிய விடிய மழை பெய்தது.
பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். எலவனாசூர்கோட்டை - திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், பாதுகாப்புக் கருதி வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.
Next Story
