கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Published on

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.

குன்னூரில் கொட்டி தீர்த்த கன மழையால்,பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் லேசான நிலச்சரிவும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவா் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேளாங்கண்ணி நகரில் தடுப்பு சுவா் இடிந்து அந்தரத்தில் உள்ளதால், அங்குள்ள குடும்பங்களுக்கு மாற்று இடங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்ய, அரசு அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com