சிக்கிமில் கனமழை , நிலச்சரிவு - 113 பேரில் 30 பேர் மட்டுமே மீட்பு
வட சிக்கிமின் லாசன் பகுதியில் நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக சிக்கித்தவிக்கும் 113 சுற்றுலாப்பயணிகளில் 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் பாலங்கள் மற்றும் சாலைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கிய 113 சுற்றுலாப்பயணிகளை மீட்கும் பணி, கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. மோசமான வானிலை மற்றும் குறைந்த காட்சித்திறன் காரணமாக மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்ட நிலையில் , 30 பேர் மட்டுமே பத்திரமாக மீட்டுள்ளனர். இதனிடையே, அடுத்த 3 நாட்களுக்கு லாசன் பகுதிக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளதால் மீட்பு பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Next Story
