சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழை - கிழிந்த பேனர்.. அறுந்த மின் கம்பம்
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், குளுமையான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல, வாணியம்பாடியை அடுத்த வளையம்பட்டு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு கனமழை வெளுத்து வாங்கியது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் ராட்சத பேனர் கிழிந்து விழுந்து, மின்கம்பி அறுந்தது. உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டு அறுந்து கிடந்த மின்கம்பி அகற்றப்பட்டது.
இதேபோல, திருத்தணி சுற்றுவட்டார பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதைத்தொடர்ந்து, சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது
Next Story
