சாலையே தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் | உதகையில் மக்கள் அவதி

x

உதகையில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி

உதகையில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 5 நாட்களுக்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பனி மூட்டம் சூழ்ந்துள்ளது.

குறிப்பாக சேரிங்கிராஸ், ஆட்சியர் அலுவலக சாலை, பிங்கர்போஸ்ட், மத்திய பேருந்து நிலையங்களில் பனிமூட்டம் அதிகமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்கின்றனர். பனிமூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்