மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில், எந்தெந்தப் பணிகளை, எப்பொழுது தொடங்குவது என திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். எனினும், எப்போது நிறைவடையும் என்பது குறித்து கணக்கிடவில்லை என்றும், அதுகுறித்து விரைவில் தெரிவிப்பதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.