Health மூச்சை நிறுத்தும் 'ப்ரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் - அதிகமாக சிரித்தாலும் ஆபத்தா?...ஆண்களே உஷார்
மூச்சை நிறுத்தும் 'ப்ரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் - அதிகமாக சிரித்தாலும் ஆபத்தா?... ஆண்களே உஷார்
Broken heart syndrome என்று அழைக்கப்படும் திடீர் இதயக் கோளாறால் பெண்களை விட ஆண்கள் இரண்டு மடங்கு உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக வெளியாகியிருக்கும் ஆய்வு முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியான அதீத மன அழுத்தத்தால் ஏற்படும் இதய செயலிழப்பால் நடக்கும் மரணங்கள் ஆண்களிடையே
2 மடங்காக அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு அதிர்ச்சியூட்டுகிறது. மருத்துவ உலகம் இதனை Broken heart syndrome என்றழைக்கிறது.
ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனில் வெளியாகியிருக்கும் ஆய்வு முடிவில், 2016 முதல் 2020 வரை
சுமார் 2,00,000 அமெரிக்கர்களின் தரவுகள் பகுப்பாய்வு
செய்யப்பட்டன.
இதில், Broken heart syndrome பாதிப்பால் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டவர்களுள் 5.5% பெண்கள் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்கள் 11.2% பேர்.
மருத்துவ உலகில் "டகோட்சுபோ கார்டியோமயோபதி (Takotsubo cardiomyopathy ) என்றழைக்கப்படும் இந்த நிலை மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கும் மருத்துவ வல்லுனர்கள் முன்கூட்டியே கண்டறிவது வருமுன் காக்கும் என்று அறிவுறுத்துகின்றனர்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் Broken heart syndrome-ஆல் அதிகம் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களை விட 46 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்
பாதிக்கும் அபாயம் 3 மடங்கு அதிகம் இருப்பதாக ஆய்வு
முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதுபற்றி சென்னையை சேர்ந்த இதயவியல் நிபுணர் டாக்டர். அஷ்வணியிடம் பேசினோம்.
