Sullan Madhan "தலைகள் சிதறும்"... சுள்ளான் மதன் கொ*லயால் பதற்றத்தில் சிவகங்கை - இறங்கிய சைபர் கிரைம்
#cybercrime | #sullanmadhan | #sivagangai
"தலைகள் சிதறும்"... சுள்ளான் மதன் கொ*லயால் பதற்றத்தில் சிவகங்கை - இறங்கிய சைபர் கிரைம் சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் மோதலைத் தூண்டும் வகையில் பதிவிட்ட 29 கணக்குகளை சைபர் கிரைம் காவல்துறையினர் முடக்கியுள்ளனர். இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய தளங்களில் "விரைவில் தலைகள் சிதறும்" உள்ளிட்ட வன்முறையைத் தூண்டும் மற்றும் கொலை மிரட்டல் விடுக்கும் வாசகங்களுடன் இரு தரப்பினரும் மாறி மாறி பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இது குறித்து தீவிர கண்காணிப்பை மேற்கொண்ட சிவகங்கை மாவட்ட காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் 25 கணக்குகள் மற்றும் ஃபேஸ்புக்கில் 4 என மொத்தம் 29 சமூக வலைதள கணக்குகளை முடக்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுள்ளான் மதன் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல்களை ஏற்படுத்த முயன்ற சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
