சென்னை மதுராந்தகத்தில் தலைமை காவலர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அரசு குடியிருப்பு அருகே வசித்து வந்த தலைமை காவலர் சேகர், வயிற்று வலி காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட சேகர், திருக்கழுகுன்றம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.