Bus Accident | Thanjavur | நேருக்கு நேர் மோதி.. சிதறிய பஸ்கள்.. 50க்கும் மேற்பட்ட பயணிகள் நிலை..?

நேருக்கு நேர் மோதி.. சிதறிய பஸ்கள்.. 50க்கும் மேற்பட்ட பயணிகள் நிலை..?

Bus Accident | Thanjavur | நேருக்கு நேர் மோதி.. சிதறிய பஸ்கள்.. 50க்கும் மேற்பட்ட பயணிகள் நிலை..? #Thanjavur #RoadAccident #ViralVideo #TNPolice தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே, அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். முதலில் அந்த காட்சிகளை பார்க்கலாம்... தஞ்சாவூர் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உத்தாணி மெயின் ரோட்டில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது..... இரண்டு பேருந்துகளிலும் 25 பெண்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.... படுகாயம் அடைந்த டிரைவர் உட்பட 50 பயணிகள், ஐந்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.... இரண்டு மணி நேரம் ஆகியும் வலங்கைமான் காவல்துறையினர் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது..... பேருந்து விபத்தால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது....

X

Thanthi TV
www.thanthitv.com